Skip Ribbon Commands
Skip to main content

​​​​​​​​​

ஒரு ஆப் அமைப்பு அல்லது இணைப்பு ஸ்டிரிங்கை எப்படி ஸ்டிக்கி ஆக்குவது

 

அது பற்றிய ஒரு கட்டுரை இங்கே இதில் ஒரு ஆப் அமைப்பு அல்லது இணைப்பு ஸ்டிரிங்கை ஸ்லாட்டில் ஸ்டிக்கி ஆக்குவது எப்படி என விவரிக்கப்பட்டுள்ளது. அஸூர் பவர்ஷெல் பயன்படுத்தி அமைப்புகள் மாறாது இருக்கும்படி செய்யலாம்.

இவைதான், அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப் உருவாக்கத் தேவையான அஸூர் பவர்ஷெல் cmdlets

  • Login-AzureRmAccount
  • Set-AzureRmContext
  • Set-AzureWebsite (இதையும் பாருங்கள் இங்கே  New-AzureRmResource cmdlet) உள்ளது

முழுமையான cmdlets மற்றும் பெராமீட்டர் மதிப்புகளை கீழே காணுங்கள்.

Login-AzureRmAccount

 
அந்த cmdlet இயக்கப்பட்டால், கேள்வி/பதில் விண்டோ திறக்கும், உங்கள் சான்றுகளை உள்ளிட்டால், முடிவுகள் படம் 1ல் காட்டப்பட்டது போல இருக்கும்.

 

படம் 1, அஸூர் பவர்ஷெல் பயன்படுத்தி எப்படி அஸூரில் உள்நுழைவது

அடுத்து, Set-AzureRmContext cmdlet ஐ இயக்கவும்.

Set-AzureRmContext -SubscriptionId "25ec5bae-####-####-####-############"

 

அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப் உருவாக்க விரும்பும் சப்ஸ்கிரிப்ஷனுக்குள் சப்ஸ்கிரிப்ஷன் ஐடியை அமையுங்கள், முடிவுகள் படம் 2ல் காட்டப்பட்டுள்ளது போல இருக்கும்

 

படம் 2, அஸூர் பவர்ஷெல் பயன்படுத்தி எப்படி அஸூர் சப்ஸ்கிரிப்ஷனை எப்படி அமைப்பது

இப்போது, அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப்புக்குச் சென்று, அப்ளிகேஷன் செட்டிங்ஸ் மீது கிளிக் செய்யுங்கள். நீங்கள் செயலி அமைப்புகளைப் பார்ப்பீர்கள். படம் 3 இது ஸ்டிக்கியாக இல்லை, இந்த உதாரணத்தில் அது MakeThisOneSticky எனப்படுகிறது.

படம் 3, ஸ்லாட்டுடன் ஸ்டிக்கியாக இல்லாத செயலி அமைப்பு, மாற்றம் நிகழும்போது இடம் மாற்றப்படும்

அந்த செயலி அமைப்பை ஸ்டிக்கியாக மாற்றுவதற்கு, பின்வருபவற்றை செயல்படுத்துங்கள்:

Set-AzureWebsite -Name "stickyslot" -SlotStickyAppSettingNames "MakeThisOneSticky"

 
குறிப்பு: பெராமீட்டரின் பெயர் பன்மையில் இருப்பதை கவனியுங்கள். இதன் பொருள் என்னவென்றால், எவையெல்லாம் ஸ்டிக்கியாக இருக்கவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றின் பெயர்கள் அனைத்தையும் நீங்கள் சேர்க்கவில்லை என்றால், சேர்க்கப்படாதவை இனிமேல் ஸ்டிக்கியாக இருக்காது. எனவே, STICKYSLOT செயலி அமைப்பும் ஸ்டிக்கியாக இருக்கவேண்டிய தேவை இருப்பதால், இந்த கமேண்டை இயக்குங்கள்:

Set-AzureWebsite -Name "stickyslot" -SlotStickyAppSettingNames @("MakeThisOneSticky", "STICKYSLOT")

 
பிறகு எதிர்பார்த்தபடி இரண்டும் ஸ்லாட்டுடன் ஸ்டிக்கியாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இணைப்பு ஸ்டிரிங்கை ஸ்டிக்கியாக ஆக்குவதற்கும் இவ்வாறே செய்யப்படுகிறது, இணைப்பு ஸ்டிரிங்கை ஸ்டிக்கி ஆக்குவதற்கு பின்வரும் அஸூர் பவர்ஷெல் cmdletஐ இயக்குங்கள்.

Set-AzureWebsite -Name "stickslot" -SlotStickyConnectionStringNames "StickySlotConnectionString"

 

படம் 4ல் காட்டப்பட்டுள்ளது போல, இந்த cmdlets க்கு அவுட்புட் எதுவும் இருக்காது. இருந்தபோதிலும், பிழை ஏதும் இல்லை என்றால், cmdlet வெற்றிகரமாக அமைந்தது என கொள்ளலாம் தேவையென்றால் போர்டலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

 
 
படம் 4. ஆப் செட்டிங் அல்லது இணைப்பு ஸ்டிரிங்கை ஸ்டிக்கியாக அமைத்தல்​ ​​​
​​​​​​​​​​​

மேலும்...​

​​​​
This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint
©2017 Microsoft Corporation. All rights reserved.