Skip Ribbon Commands
Skip to main content

​​​​​​​​​

செயலி சர்வர் ஸ்லாட்டுகளிடையே மாறும்போது, தரவுத்தள இணைப்பு ஸ்ட்ரிங்

 

படம் 1ல் காட்டப்பட்டுள்ளது போன்ற ஆர்கிடெக்சர் கொண்ட, மிகப்பெருமளவு டிராஃபிக்கை கையாளும் மற்றும் தரவுத்தளத்தை அணுகும் அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப்பை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் டெப்ளாய் செய்யும்போது, பிழைகளை டெப்ளாய் செய்தல் அல்லது குறிப்பிடத்தக்க அளவு நேரம் இயங்காமல் இருக்கும் அபாயத்தை எதிர்கொள்ள விரும்பமாட்டீர்கள், ஒரு டெப்ளாய்மெண்ட் ஸ்லாட்டில் இதைத் தான் நீங்கள் விரும்புவீர்கள். டெப்ளாய்மெண்ட் ஸ்லாட் என்பது அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப் (W3WP), இது உங்கள் அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப் தயாரிப்புடன் இணைந்துள்ளது மேலும் நான் இங்கே விவரித்துள்ள அதே அஸூர் சர்வீஸ் பிளானில் (ASP) இயங்குகிறது. நேரலையில் உள்ள வெப் ஆப்பில் வெளியிடுவதற்கு முன்னர், உங்கள் சோதனையை டெப்ளாய் செய்ய அல்லது உருவாக்கத் தயாராக இல்லாத குறியீடுகளை சோதனை செய்வதற்கு இந்த டெவலப்மெண்ட் ஸ்லாட் உங்களுக்கு உதவுகிறது. இந்த டெப்ளாய்மெண்ட் ஸ்லாட்டின் முக்கியமான பயன்பாடு என்னவென்றால், ஒரு பட்டனையும் புதிய வடிவத்தையும் கொண்ட டெப்ளாய்மெண்ட் ஸ்லாட்டையும் உருவாக்கத்துடன் மாற்றிக்கொள்ளலாம், இப்போது ஒரே கிளிக்கில் உங்கள் புதிய வடிவம் நேரலைக்கு மாறிவிடும்.

படம் 1ல் பாருங்கள், 2 SQL அஸூர் தரவுத்தளத்தைக் கொண்ட 2 SQL சர்வர் உள்ளது, ஒன்று stickyslot-pro எனவும் மற்றொன்றுstickyslot-tst எனவும் அழைக்கப்படுகிறது. கூடுதலாக, STICKYSLOT-ASP என அழைக்கப்படும் ஆப் சர்வீஸ் பிளான் (ASP) உள்ளது, இது testing என்ற டெப்ளாய்மெண்ட் ஸ்லாட்டுடன் stickyslot என அழைக்கப்படும் ஆஸூர் ஆப் சர்வீஸ் வெர் ஆப்பை இயக்குகிறது. அவை அனைத்தும் STICKSLOT-RG என அழைக்கப்படும் வளஆதாரக் குழுவில் உள்ளது.

படம் 1, சிறந்த உதாரணம், ஆப் சர்வீஸ் ஆர்கிடெக்சர் படம்

ஸ்டிக்கி ஸ்லாட்டுகளை விவரிக்கிற சிறந்த கட்டுரை இதோ.

இந்தக் கட்டுரையில், அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப் டெப்ளாய்மெண்ட் ஸ்லாட்டுகள் PRO (உருவாக்கம்) இலிருந்து TSTக்கு (சோதனை) மாறுவது பற்றி விவாதித்துள்ளேன். விஷயம் என்னவென்றால், இயல்பாகவே ஆப் அமைப்புகளும் தரவுத்தள இணைப்பு ஸ்டிரிங்ககளும் ஸ்லாட்டுடன இயைந்து இருப்பதில்லை. மேலும் சோதனை ஸ்லாட், உருவாக்க ஸ்லாட்டாக மாறும்போது வெப் ஆப்பைப் பின்பற்றும். இந்தச் சூழலில், என்னுடைய testing டெப்ளாய்மெண்ட் ஸ்லாட்டை மாற்றும்போது, அது உருவாக்கத்துக்கு stickslot-tst தரவுத்தளத்திலிருந்து அதனுடைய தரவுகளைப் பெறுகிறது, பிறகு மாற்றப்பட்ட வெப் ஆப் stickyslot-pro தரவுத்தளத்துக்குப் பதிலாக stickyslot-tst தரவுத்தளத்தைக் காட்டும். ஆகவே, வெப் ஆப் டெவலப்மெண்ட் ஸ்லாட்டை மாற்ற வேண்டும் ஆனால் தரவுத்தள இணைப்பு ஸ்ட்ரிங்கை தற்போதைய உருவாக்க வெப் ஆப் உருவாக்கத்தையும், சோதனை, சோதனை தரவுத்தளைத்தைக் காட்டுமாறு வைப்பதற்கு ஒரு வழி வேண்டும் அமைப்பில் 'ஸ்டிக்கி டு த ஸ்லாட்' இயக்கி இதை அடையலாம்.

என்னுடைய வெப் ஆப் உருவாக்கத்துக்கு, என்னிடம் 2 மதிப்புகள் உள்ளது, ஒரு மாற்றத்தைச் செய்யும்போதும் நான் உருவாக்கத்திலேயே இருக்கவேண்டும் என ஊகித்துக்கொள்ளுங்கள். படம் 2ஐப் பாருங்கள்

 

படம் 2. டெஸ்டிங் ஸ்லாட் கொண்டு மாற்றும்போது கூட உருவாக்கத்திலேயே இருக்கும் ஸ்டிக்கி ஸ்லாட் அமைப்புகள்

Value = ProductionEnvironment மற்றும் StickySlotConnectionString என அழைக்கப்படும் இணைப்பு ஸ்டிரிங் கொண்ட STICKSLOT பெயருள்ள ஆப் அமைப்பு இருப்பதை கவனியுங்கள், இதில் உருவாக்க தரவுத்தளப் பெயர், பயனர் மற்றும் கடவுச்சொல் ஆகியவை இருக்கும், உதாரணம். மிக முக்கியமாக, ஸ்லாட் அமைப்பு சரிபார்ப்பு பெட்டி குறியிடப்பட்டிருப்பதை கவனியுங்கள், இதன் பொருள் என்னவென்றால், மாற்றினால் கூட இது வெப் ஆப் உடன்தான் இருக்கும் என்பது இதன் பொருள். டெஸ்டிங் டெவலப்மெண்ட் ஸ்லாட்டிலும் நான் அதே ஆப் அமைப்புகள் மற்றும் இணைப்பு ஸ்ட்ரீங் (கீ மற்றும் பெயர்) வைத்திருப்பதை கவனியுங்கள், படம் 3ஐப் பாருங்கள். ஆனால் அவை வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டுள்ளது, எனவே அது டெஸ்டிங் வெப் ஆப்பிலேயே நீடிக்கிறது. ஒரு போதும் என்னுடை டெஸ்டிங் வெப் ஆப் உருவாக்க என்விரான் மெண்டைக் குறிக்க நான் விரும்பமாட்டேன்.

படம் 3. உருவாக்க ஸ்லாட் கொண்டு மாற்றும்போது கூட டெஸ்டிங்கிலேயே இருக்கும் ஸ்டிக்கி ஸ்லாட் அமைப்புகள்

MoveWhenSwapped என்ற கூடுதல் ஆப் அமைப்பை நான் சேர்த்திருக்கிறேன், இதை நான் ஸ்டிக்கியாக உருவாக்கவில்லை. இது மாற்றும்போது மாறும். ஆகவே, உருவாக்கம் மற்றம் சோதனை இரண்டுக்கு இடையே மாறும்போது, ஆப் செட்டிங் உருவாக்க வெப் ஆப் கட்டமைப்பில் இருக்கும், சோதனை கட்டமைப்பில் இருக்காது. டெஸ்டிங் என்விரான்மெண்டில் அனைத்தும் சோதிக்கப்பட்டு உருவாக்கத்துக்குத் தயாராக இருக்கும்போது, டெஸ்டிங் வெப் ஆப்புக்குச் சென்று மாறுவதற்கான இணைப்பை கிளிக் செய்யுங்கள். படம் 4 இல் உள்ளதுபோல.

படம் 4. அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப் ஐ ஸ்லாட்ஸ் மற்றும் ஸ்டிக்கி ஸ்லாட்டுகள் இடையே மாற்றுதல்

"swap with preview" என அழைக்கப்படும் ஒரு அம்சம் உள்ளது, அது பற்றி இங்கே சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையான டிராஃபிக்குக்கு ரூட் செய்வதற்குமுன், அனைத்தும் எதிர்பார்க்கப்பட்ட படி வேலை செய்கிறது என்பதை உறுதிசெய்துகொள்வதற்கு, அடிப்படையில் இந்த அம்சம் உங்கள் டெஸ்டிங் என்விரான்மெண்டை உருவாக்கத்தில் காட்டுவதற்கு உங்களுக்கு உதவுகிறது. மாற்றத்தைப் பூர்த்தி செய்வதை அல்லது அதை திரும்ப பழைய நிலைக்கு மாற்றுவதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் உங்கள் டெஸ்டிங் என்விரான்மெண்டை உருவாக்கத்தில் நீண்ட நேரம் வைப்பதற்கு நீங்கள் விரும்பமாட்டீர்கள். இது எல்லா சூழல்களிலும் வேலை செய்யும் என்பதற்கில்லை, தரவுத்தள கட்டமைப்பு மாற்றமிருந்து அதை டெப்ளாய் செய்தால் அது உருவாக்க என்விரான்மெண்டை உடைக்கும், மேலும் டெஸ்டிங் இன்ஸ்டன்ஸ் ஏற்கனவே உள்ள உருவாக்க தரவுத்தளம் மேம்படுதப்படாத வரை அதில் வேலை செய்யாது. இருப்பினும், அதை முயற்சிசெய்து பாருங்கள்JIC. இருந்தபோதிலும், மாற்றத்தைச் செய்து பிறகு ஆப் அமைப்புகளும் இணைப்பு ஸ்டிரிங்குகளும் எதிர்பார்க்கப்பட் முடிவுகளை அளிக்கிறதா என உறுதிசெய்வதற்கு உருவாக்க வெப் ஆப்பைப் பாருங்கள். உண்மையில் அவை படம் 5ல் காட்டப்படுள்ளது போல இருக்கிறது.

 
 

படம் 5, ஸ்டிக்கி ஸ்லாட்டுகள் அஸூர் ஆப் சர்வீஸ் வெப் ஆப் ஆப் அமைப்புகள் மற்றும் இணைப்பு ஸ்டிரிங்குகள்

மதிப்புகள் எதிர்பார்க்கப்பட்ட படியே இருந்தது, மேலும் MoveWhenSwapped டெஸ்டிங்கிலிருந்து உருவாக்க வெப் ஆப் செயல்முறைக்கு மாறியிருந்தது. MoveWhenSwapped இடம் மாற்றப்பட்டுள்ளது, அது இனிமேல் டெஸ்டிங் வெப் ஆப்பில் இல்லை என்பதை இது காட்டுகிறது. அப்படியென்றால், உங்கள் வெப் ஆப்பை மாற்ற விரும்புகிறீர்கள் ஆனால் இணைப்பு ஸ்டிரிங் அப்படியே இருக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால், அமைப்பை ஸ்லாட் அமைப்பு சரிபார்ப்பு பெட்டியில் குறியிடுவதன் மூலம் அமைப்பை ஸ்டிக்கியாக அமையுங்கள்.

மேலும் விளக்கமாகப் பார்க்கலாம்

எனக்கு இருந்து சந்தேகங்கள்:

  • என்னுடைய குறியீட்டிலிருந்து இணைப்பு ஸ்டிரிங் மற்றும் ஆப் அமைப்புகளை எவ்வாறு அணுகுவது
  •  என்னுடைய web.config கோப்பில் இணைப்பு ஸ்டிரிங் இருந்தால் என்னவாகும் மேலும் என்னிடம் இரண்டும் இருந்தால் என்னவாகும்

இந்தக் கேள்விகளுக்கு விடை காணுவோம்

என்னுடைய குறியீட்டிலிருந்து இணைப்பு ஸ்டிரிங் மற்றும் ஆப் அமைப்புகளை எவ்வாறு அணுகுவது

போர்டலில் அல்லது web.configல் கட்டமைக்கப்பட்ட மதிப்பிலிருந்து இணைப்பு ஸ்டிரிங்கை அணுகுவதற்கு நீங்கள் பின்வரும் குறியீடைப் பயன்படுத்துகிறீர்கள்.

ConfigurationManager.ConnectionStrings["StickySlotConnectionString"]?.ConnectionString;

 
இணைப்பு ஸ்டிரிங்கின் பெயரை உள்ளிடுங்கள், மதிப்பு தெரியும்

ஆப் அமைப்பு மதிப்பை அணுகுவதற்கு, பின்வருவதைப் பயன்படுத்துங்கள்.

ConfigurationManager.AppSettings["STICKYSLOT"];

 
என்னுடைய web.config கோப்பில் இணைப்பு ஸ்டிரிங் இருந்தால் என்னவாகும் மேலும் என்னிடம் இரண்டும் இருந்தால் என்னவாகும்

பெயர் தனித்துவமானாதாக இருக்கும் வரையில் உண்மையில் ஒன்றும் ஆகாது. மதிப்பு web.configல் இருந்தாலும் அதைக் காண முடியும், மதிப்பு போர்டலில் இருந்தாலும் அதைக் காண முடியும். எந்த ஒரு இணைப்பு ஸ்டிரிங் அல்லது ஆப் அமைப்புக்கும் அதே பெயர் இருக்காது என்பதை கவனியுங்கள். இவ்வாறு நிகழ்ந்தால், நான் சோதனை செய்து பார்க்கும்போது போர்டலில் கட்டமைக்கப்பட்ட மதிப்புகளே குறியீட்டால் அணுகப்படுவதாக இருக்கிறது. ஆகவே, உங்களிடம் StickySlotConnectionString என அழைக்கப்படும் இணைப்பு ஸ்டிரிங் web.config மற்றும் போர்டல் இரண்டிலும் கட்டமைக்கப்பட்டு இருந்தால், web.configல் நீங்கள் செய்யும் மாற்றங்கள் புறக்கணிக்கப்படும்.​​

​​
​​​​​​​​​​​

மேலும்...​

​​
This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint
©2017 Microsoft Corporation. All rights reserved.