Skip Ribbon Commands
Skip to main content

​​​​​​​​​

​​

விண்டோஸ் 10க்கான ரிமோட் டெஸ்க்டாப் முன்னோட்டத்திலிருந்து வெளியேறுகிறது..


எங்களுடைய விண்டோஸ் 10 க்கான மைக்ரோசாஃப்ட் ரிமோட் டெஸ்க்டாப் பிரிவியூ கிளையண்டை நிறுவி பயன்படுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து தொடங்க விரும்புகிறேன் மேலும் இது வரை மிகச் சிறந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்.

அடிப்படை அம்சங்களின் தொகுப்பில் சில மாதங்கள் செயல்பட்ட பிறகு இந்த செயலியை முன்னோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வருவதில் மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறோம், இதன் மூலம் டெஸ்க்டாப், டேப்லட். ஃபோன் அல்லது Continuum for phone மூலம் விண்டோஸ் 10 சாதனம் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அதே மிகச்சிறந்த அனுபவத்தைப் பெறுவார்கள்.

விண்டோஸ் 10 தொடங்கப்பட்டுவிட்டதால், எங்களுடைய விண்டோஸ் [ஃபோன்] 8.1 பயன்படுத்திக் கொண்டிருக்கையில் ஸ்டோரிலிருந்து நீங்கள் ரிமோட் டெஸ்க்டாப் செயலியை நிறுவியிருந்தால், நீங்கள் மைக்ரோசாஃப்ட் ரிமோட் டெஸ்க்டாப் பிரிவியூ செயலியை நிறுவினால் மட்டுமே எங்களுடைய புதிய விண்டோஸ் 10 யுனிவர்சல் செயலி கிடைக்கும். நாங்கள் ஆரம்ப முன்னோட்ட கட்டத்திலிருந்து வெளியேறுகையில், விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 10 மொபைல் இரண்டிலும் இயங்கும் சாதனங்களுக்கு ரிமோட் டெஸ்க்டாப்பின் கீழ் 8.1 வெளியீட்டுக்குப் பதிலாக யுனிவர்சல் செயலியை வைக்கிறோம்.

அடுத்த இரண்டு வாரங்களில் இன்னும் அதிகமான பயனர்களுக்கு விண்டோஸ் 10 வடிவம் வெளியிடப்பட இருக்கிறது, இதனால் இந்த வலைப்பதிவை நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலும் புதுப்பிக்கப்பட்ட செயலியை உங்களால் பார்க்கமுடியாமல் போவதற்கு சாத்தியமுள்ளது. நீங்கள் ஏற்கனவே அதை நிறவி இருக்கவில்லையென்றால், ரிமோட் டெஸ்க்டாப் என்று தேடுவதன் மூலம் ஸ்டோரில் செயலியைக காணமுடியும்.

மேம்படுத்தலின் போது பின்வருபவை நிகழும்:

  • டெஸ்க்டாப் இணைப்புகள் தக்கவைக்கப்படும்
  • பயனர் பெயர் தக்கவைக்கப்படும்
  • கடவுச்சொற்கள் மீண்டும் உள்ளிடப்பட வேண்டியிருக்கும்
  • கேட்வேக்கள் தக்கவைக்கப்படும்
  • விண்டோஸ் ஃபோன் 8.1 இல் உள்ள ரிமோட் மூலங்களின் URLகள் தக்கவைக்கப்படும், ஆனால் நீங்கள் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கும்
  • விண்டோஸ் 8.1 ரிமோட் மூலங்கள் தக்கவைக்கப்படாது, மீண்டும் சேர்க்கப்பட வேண்டியிருக்கும்
  • சில பொதுவான அமைப்புகள் தக்கவைக்கப்படும்

விண்டோஸ் 8.1 வடிவத்தில் உள்ள சில அம்சங்கள் இன்னும் விண்டோஸ் 10 வடிவத்தில் சேர்க்கப்படவில்லை. எங்களுடைய அடுத்த புதுப்பிப்புகளை திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களுக்கு மிகமுக்கியமான அம்சங்களை எவை என்பது பற்றிய கருத்துக்களை நாங்கள் பாராட்டுகிறோம்.

இதுவரை கிடைக்காத அம்சங்களின் பட்டியல்:

  • ஒரே நேரத்தில் பல்வேறு இணைப்புகள்
  • டைனமிக் ரெஸொல்யூஷன் மற்றும் திருப்புதல்
  • பிரிண்டர் ரீடைரக்ஷன்
  • ஸ்மார்ட்கார்டு ரீடைரக்ஷன்
  • மைக்ரோஃபோன் ஆதரவு
  • மொழியாக்கம் செய்யப்பட்ட செயலி (தற்போது ஆங்கிலத்தில் மட்டும்)

இந்த அம்சங்கள் உங்களுக்கு முக்கியமானவை என்றால், ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷன்ஸ் செயலியைப் (MSTSC) பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். இது விண்டோஸில் இணைந்து வருகிறது.

முன்னோட்டத்திலிருந்து வெளியேறுகிறோம் என்றால் முடித்துவிட்டோம் என்று பொருள் இல்லை. ஏற்கனவே சில அம்சங்களை தயார் செய்து கொண்டிருக்கிறோம், மேலும் ஸ்டோரில் வரும் கருத்துக்களையும் எங்களுடைய அம்சங்கள் கோரல் தளத்தையும் தொடர்ந்து கண்காணிப்போம். இது அடுத்து வரவிருக்கும் அம்சங்களின் தொகுப்பில் கவனத்தை செலுத்துவதற்கு எங்களுக்கு உதவும், மேலும் செயலிக்கு தொடர்ந்து புதுப்பிப்புகளை எதிர்பார்க்கலாம்.

நான் செயலியின் முதன்மை வடிவத்தை எப்படி அணுகுவது?

செயலியின் முன்னோட்டமல்லாத வடிவத்தை ஸ்டோரில் ரிமோட் டெஸ்க்டாப் என்ற பெயரில் காணலாம். நீங்கள் முன்பே எங்களுடைய செயலியின் விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் போன் 8.1 வடிவத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், வெளியீட்டு செயல்முறை மூலம் மேம்படுத்துவதற்கு உங்கள் சாதனம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நிறுவப்பட்டுள்ள செயலிகளை ஸ்டோர் அடுத்தமுறை புதுப்பிக்கும்போது நீங்கள் விண்டோஸ் 10 வடிவத்துக்கு தானாகவே புதுப்பிக்கப்படுவீர்கள்.

நீங்கள் மைக்ரோசாஃப்ட் ரிமோட் டெஸ்க்டாப் பிரிவியூவை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் அல்லது ரிமோட் டெஸ்க்டாப்புக்கு நீங்கள் புதியவர் என்றால், ஸ்டோருக்கு சென்று இன்றே செயலியைப் பதவிறக்குங்கள் மேலும் உங்கள் கருத்துக்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நான் ஸ்டோரில் இன்னமும் பிரிவியூ செயலியை ஏன் பார்க்கிறேன்?

விண்டோஸ் 10 வடிவத்திற்கான ஆரம்ப முன்னோட்ட காலம் முடிந்துவிட்ட வேளையில் நீங்கள் தொடர்ந்து ஸ்டோரில் இரண்டு செயலிகளைப் பார்ப்பீர்கள்: ரிமோட் டெஸ்க்டாப் மற்றும் மைக்ரோசாஃப்ட் டெஸ்க்டாப் பிரிவியூ.

உங்களுடைய தினசரி ரிமோட் பயன்பாடுகளுக்காக செயலியைப் பயன்படுத்த விரும்பினால் ரிமோட் டெஸ்க்டாப் வடிவத்தை நிறுவுமாறு பரிந்துரைக்கிறோம். இந்த செயலியின் புதுப்பிப்பு மெதுவாவே நடைபெறும் மேலும் மிகக் குறைந்த அபாயங்களைக் கொண்டது.

இருப்பினும், அதிக பிரச்சனைகள் மற்றும் அடிக்கடி செயலற்றுப் போகிற தன்மை கொண்ட வெளியீட்டுக்கு முந்தைய மென்பொருளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், மற்றவர்களுக்கு முன்னால் புதிய அம்சங்களைப் பயன்படுத்தி அவற்றை மேலும் சிறந்ததாக்க கருத்துக்களை அளிக்க விரும்பினால் மைக்ரோசாஃப்ட் ரிமோட் டெஸ்க்டாப் பிரிவியூ உங்களுக்கானது.

இரண்டு செயலிகளையும் ஒரே நேரத்தில் நிறுவமுடியும்.

விண்டோஸ் ஃபோன் 8.1, விண்டோஸ் 8.1, iOS, Mac OS X, மற்றும் ஆன்ட்ராய்டு ஆகியவற்றில் இயங்கும் பிற சாதனங்களிலும் ரிமோட் டெஸ்க்டாப் க்ளையண்ட் கிடைக்கிறது.​


​​​​​​​​​​​

மேலும்...

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint 2013.
©2016 Microsoft Corporation. All rights reserved.