Skip Ribbon Commands
Skip to main content

​​​​​​​​​

​​

புரொவிஷனிங் பேக்கேஜ்கள் – என்ன செய்ய முடியும் அல்லது செய்யமுடியாது?


ஹாய் விண்டோஸ் 10 பயன்டுத்தும் நண்பர்களே!

இன்றைக்கு நான் விரும்பும் ஒரு தலைப்பு பற்றி பேச விரும்புகிறேன்: விண்டோஸ் 10 புரொவிஷனிங்.

புதிய விண்டோஸ் 10 டெப்ளாய்மெண்ட் முறை (அதாவது புரொவிஷனிங்) உண்மையில் செய்யக்கூடிய ஒன்றுதானா என்பது பற்றி அதிகமாக இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. உண்மையாகக் கூறவேண்டுமென்றால், என்னுடைய அனுபவத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் அந்த முறையைப் பயன்படுத்துவதை நான் பார்க்கவில்லை. அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மைக்ரோசாஃப்டின் ஜப்பான் பிரிவுக்குள் ஒரு ஆய்வைக்கூட மேற்கொண்டேன். முதல் 200 நிறுவனங்களில் விண்டோஸ் 10 டெப்ளாய்மெண்ட் முறையைத் தேர்ந்தெடுத்த 60 பேரிடம் பேசினேன்: அவர்களில் 90% பேர் பாரம்பரிய "வைப் அண்ட் லோட்" முறைக்குச் செல்ல முடிவெடுத்துவிட்டனர்.

ஏன்? அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் ஒன்றாக நான் நினைப்பது வாடிக்கையாளர்கள் பாரம்பரியமான டெப்ளாய்மெண்ட் முறைக்குப் பழகி விட்டார்கள் மேலும் அது விண்டோஸ் 10 இலும் சிறப்பாக வேலை செய்கிறது. அவர்கள் முழுமையான டெப்ளாய்மெண்ட் முறையையும் ஆவணப்படுத்தி இருக்கக்கூடும், எனவே புதிய டெப்ளாய்மெண்ட் வடிவமைப்பு மற்றும் ஆவணப்படுத்தல் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் விரும்பியிருக்கலாம். ஜப்பானில், உதாரணமாக எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர், ஒட்டுமொத்த சாதன மாற்றம் திட்டமிடப்பட்ட வேளையில் விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றி முடிவுசெய்தனர். குறிப்பிட்ட இந்த விஷயத்தைப் பொறுத்த வரை, பெரும்பாலும் அவர்கள் "வைப் அண்ட் லோட்" முறையைப் பயன்படுத்துவார்கள்.

என் மனதில் தோன்றும் இரண்டாவது காரணம், புரொவிஷனிங் முறையில் சில கட்டுப்பாடுகளும் சவால்களும் உள்ளன: உதாரணமாக, கடையில் வாங்கும் விண்டோஸ் 10 சாதனத்திலிருந்து ப்ளாட்வேரை அகற்றுவதற்கு எளிதான வழியை (நீங்கள் இதை எழுதலாம், ஆனால் அனைத்து சாதனங்களும் அது ஒன்றுபோல வேலை செய்வதில்லை) அது கொண்டிருக்கவில்லை. PRO (EDU)விலிருந்து என்டர்பிரைஸுக்கு மட்டும்தான் பதிப்பு மேம்பாடு கிடைக்கிறது. அப்படியிருக்க நீங்கள் வாங்கக்கூடிய பெரும்பாலான சாதனங்கள் விண்டோஸ் 10 ஹோம் எடிஷனுடன் தான் வருகின்றன. (Home இலிருந்து Proவுக்கும், பிறகு Pro விலிருந்து Entக்கும் PPKG மூலம் மாறும் வழி ஒன்று உள்ளது). இறுதியாக, விண்டோஸ் ஐசிடி கருவி (இப்போதைக்கு) அதிகம் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக இல்லை (அமைப்புகள் பற்றிய சில தகவல்கள் மற்றும் சில உள்ளீட்டு வடிவங்கள் இல்லாமல் இருக்கிறது).

என்னைப் பொறுத்தவரை, ஒரு சூழலில் மட்டும்தான் புரொவிஷனிங் பயன்படுத்த வேண்டும்: BYOD. இது ஒரு வணிக நோக்கிலான பயணத்தின் போது விற்பனை அதிகாரியின் சாதனம் தொலைந்துவிட்டால்/சேதமடைந்துவிட்டால்/திருடப்பட்டுவிட்டால் ஒரு ஜடி நிபுணரின் உதவியின்றி அவற்றை மாற்றவேண்டிய ஒரு அதிமுக்கியமான வணிக சூழலில் தீர்வளிக்கக்கூடியது. அவருடைய சாதனத்தை என்டர்பிரைஸ் பதிப்புக்கு மேம்படுத்தி ஆஃபீஸ் 2016 நிறுவி VPN புரொஃபைல் அமைத்து தேவையென்றால் டொமைனில் சேர்ந்து அவர் துரிதமாக வேலைக்குத் திரும்புவதற்கு புரொவிஷனிங் உதவும்.

வேறு எந்த சூழலுக்கும், நீங்கள் இன்-பிளேஸ் அப்கிரேட் (விண்டோஸ் 7, 8, 8.1 சாதனங்களுக்கானது) அல்லது ஏதேனும் புதிய சாதனத்துக்கு வைப் அண்ட் லோட் பயன்படுத்தலாம்.

புரொவிஷனிங் முறையில் நாம் சில கட்டுப்பாடுகளை எதிர்கொண்டாலும், PPKG இலிருந்து எனக்குக் கிடைத்த அனைத்து பரிசோதனை முடிவுகளையும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். இதன் மூலம் உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான டெப்ளாய்மெண்ட் முறையைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு அனைத்து முக்கியமான விஷயங்களும் கையிலிருக்கும்.

 • கார்ப்பரேட் இன்ஃப்ராவில் சாதனத்தைப் பதிவுசெய்யுங்கள்
  • டொமைனில் இணைதல் –> சரி
   • [Runtime Settings]>[Accounts]>[Computer Account]
    • [Account] domain\account (i.e. contoso\admin)
    • [DomainName] domain FQDN (i.e. contoso.com)
    • [Password] domain join account password
  • அஸூர் ஏடியில் இணைதல் –> இல்லை (இது PPKG அளிக்கும் பதிவுசெய்வதை அங்கீகரிக்கும் முறைக்கு தொடர்புடையது, இது அஸூர் ஏடி ஜாய்ன் மற்றும் இன்ட்யூன் இரண்டுக்கும் இணக்கமானதில்லை)
  • இன்ட்யூன் பதிவு –> இல்லை (மேலே கூறப்பட்டது போலவே)
  • SCCM On-prem MDM பதிவு –> சரி (நான் சோதித்துப் பார்க்கவில்லை ஆனால் அதை எப்படி செய்வது என்பது பற்றி விவரிக்கும் மிகச்சிறந்த கட்டுரையைப் பார்த்தேன்)
 • சுயவிரங்கள்
  • வைஃபை –> சரி
   • [Runtime Settings]>[ConnectivityProfiles]>[WLAN]>[WLANSetting]
    • Add the [SSID] of the WiFi இன் [SSID]ஐ சேருங்கள்
    • [WLANXmlஅமைப்புகள்] கீழ், [AutoConnect], [HiddenNetwork], [SecurityKey] மற்றும் [Security Type] ஆகியவற்றை நிரப்புங்கள்
  • சான்றிதழ் –> சரி
   • Root CA சான்றிதழ்களுக்கு, [Runtime Settings]>[Certificates>[RootCertificates]
    • [CertificateName] உள்ளிட்டு [Add] கிளிக் செய்யுங்கள்
    • CER ரூட் CA சான்றிதழ் கோப்புக்கு [CertificatePath] வழி
  • மின்னஞ்சல் சுயவிவரம் –> BYOD சூழலில் உங்களுக்கு டொமைன் அல்லது அஸூர் ஏடி கணக்கை நீங்கள் அறியமாட்டீர்கள் என்பதால், புரொவிஷனிங் கொண்டு இதைச் செய்வது சாத்தியமில்லை என நினைக்கிறேன்
 • OS தனிப்பயனாக்குதல்
  • ஸ்டார்ட் மெனு –> சரி (குறிப்பு: இது தற்போதைய பயனருக்குப் பொருந்தாது, கணினியில் புதிதாக வரும் பயனர்களுக்குப் பொருந்தும்)
  • வால்பேப்பர் –> இல்லை (படக் கோப்பை நகலெடுத்தேன், அதைப் பயன்படத்தமுடியவில்லை, இது எதிர்பார்க்கப்பட்ட செயல்பாடுதானா எனத் தெரியவில்லை, இதைப் பற்றி பிறகு மீண்டும் கூறுகிறேன்)
  • லோக்கல் கணக்கு உருவாக்குதல் –> சரி
   • [Runtime Settings]>[Accounts]>[Users]
   • Type a [User Name] உள்ளிட்டு [Add] கிளிக் செய்யுங்கள்
   • [Password: புதிதாக உருவாக்கப்பட்ட கணக்கின் கடவுச்சொல்
   • [UserGroup] பயனரை "அட்மினிஸ்ட்ரேட்டர்" குழுவில் சேர்க்கவும்
  • UWF –> சரி
   • [Runtime Settings]>[UnifiedWriteFilter]
   • [FilterEnabled] TRUE
   • [OverlaySize] MBஇல் (அதாவது 1024)
   • [OverlayType] RAM அல்லது டிஸ்க் தேர்ந்தெடுக்கவும்
   • [Volumes]
    • வடிகட்டுவதற்கு [DriveLetter]ஐ (அதாவது "C:") உள்ளிட்டு [Add] கிளிக் செய்யுங்கள்
    • [Protected] TRUE
  • Bitlocker –> இல்லை (ஆம் ஸ்கிரிப்டுக்குள் manage-bde கமேண்ட் பயன்படுத்துகிறது)
  • பதிப்பு மேம்பாடு –> சரி (Pro/Edu இலிருந்து மட்டும் Enterpriseக்கு)
   • [Runtime Settings]>[EditionUpgrade]
   • [UpgradeEditionWithProductKey] என்டர்பிரைஸ் தயாரிப்பு கீயை உள்ளிடுங்கள்
 • யுனிவர்சல் செயலிகள்
  • நிறுவல் –> சரி (சைட்லோடிங்கை செயல்படுத்த மறக்காதீர்கள், சான்றிதழ், டிபென்டென்சிகள் மற்றும் செயலி கோப்பு ஆகியவற்றை டெப்ளாய் செய்யுங்கள்)
   • சைட்லோடிங் செயல்படுத்துவதற்கு, [Runtime Settings]>[Policies]>[ApplicationManagement]>[AllowAllTrustedApps]>[Yes]
   • சான்றிதழ் செயல்படுத்துவதற்கு, [Runtime Settings]>[Certificates]>[TrustedPeopleCertificates]
    • [CertificateName] உள்ளிட்டு [Add] கிளிக் செய்யுங்கள்
    • [TrustedCertificate] செயலி சான்றிதழ் கோப்புக்கான வழியைக் குறிப்பிடுங்கள்
   • டிபென்டென்சிக்களுடன் செயலியை இம்போர்ட் செய்வதற்கு, [Runtime Settings]>[UniversalAppInstall]
    • [PackageFamilyName] உள்ளிட்டு [Add] கிளிக் செய்யுங்கள் (எந்தப் பெயராகவும் இருக்கலாம்)
    • [ApplicationFile] ".appxbundle" கோப்பைக் குறிப்பிடுங்கள்
    • [DependencyAppxFiles] அனைத்து டிபென்டென்சி கோப்புகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேருங்கள்
  • நிறுவல் நீக்கம் –> சரி
   • [Runtime Settings]>[UniversalAppUninstall]
   • நிறுவல் நீக்கம் செய்யப்பட வேண்டிய செயலி நிறுவப்பட்டுள்ள கணினியில், பேக்கேஜ் ஃபேமில் பெயரைக் கண்டுபிடிப்பதற்கு get-appxpackage என்ற பவர்ஷெல் கமேண்டை இயக்குங்கள்.
   • மேலே கூறப்பட்டள்ள கமேண்டைப் பயன்படுத்தி கண்டுபிடித்த [PackageFamilyName] உள்ளிடுங்கள்.
 • Win32 செயலிகள் நிறுவல்
  • MSI –> சரி
   • [Runtime Settings]>[ProvisioningCommands]>[DeviceContext]
   • [CommandFiles] MSI கோப்பை சேருங்கள்
   • [CommandLine] MSI பேக்கேஜை நிறுவுவதற்கு கமேண்ட் லைனை உள்ளிடுங்கள்: "msiexec.exe /i xxx.msi /q"
  • ஆஃபீஸ் –> சரி (WICD பயன்படுத்தி எதை எப்படி செய்வது என்பதை விளக்கி மற்றொரு கட்டுரையை நான் எழுதுவேன்).

புரொவிஷனிங்கில் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை முடிவுசெய்வதில் இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். விண்டோஸ் ஐசிடி இல் கிடைக்கும் அனைத்து சாத்தியமான அமைப்புகளை நான் இங்கே விவாதிக்கவில்லை, எனவே வேறு ஏதேனும் அமைப்புகள் உங்களுக்குத் தேவையென்றால், விண்டோஸ் ஐசிடி கருவியில் தேடிப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன் :)


​​​​​​​​​​​

மேலும்...

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint
©2017 Microsoft Corporation. All rights reserved.