Skip Ribbon Commands
Skip to main content

​​​​​​​​

உள்ளீட்டு முறை திருத்திகளை நிறுவிப் பயன்படுத்துதல்


வழக்கமான விண்டோஸ் உள்ளீட்டு முறை திருத்தியை (IME) நிறுவிப் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது.

உள்ளீட்டு முறை திருத்தியை நிறுவுதல்

நான்கு வெவ்வேறு ஆசிய மொழிகளில் எழுத்துக்களை உள்ளிடுவதற்கு உள்ளீட்டு முறை திருத்தியை (IMEகள்) நிறுவிப் பயன்படுத்துவது எப்படி எனப் பின்வரும் பிரிவுகள் விவரிக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

ஒரு செயலியில் உள்ளீட்டு முறை திருத்தியை செயல்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு, கேமில் உள்ளீட்டு முறை திருத்தியைப் பயன்படுத்துதல் என்பதைப் பாருங்கள்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் XP சிஸ்டங்களில் IME இயல்பாக நிறுவப்பட்டிருப்பதில்லை. நிறுவுவதற்கு, பின்வரும் படிநிலைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

ஒரு IME ஐ நிறுவுவதற்கு

  1. கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று Regional and Language Optionsஐத் திறக்கவும்.
  2. Languages டேபில், Install files for East Asian languages checkbox என்பதைத் தேர்ந்தெடுங்கள். 


ஒரு துணை மொழி ஆதரவு நிறுவல் உரையாடல் பெட்டி தோன்றும், இது மொழிக் கோப்புகளுக்கான சேமிப்பிட தேவைகளைக் கூறுகிறது.​
  1. உரையாடல் பெட்டியை மூடுவதற்கு OK கிளிக் செய்யுங்கள்.
  2. Languages டேபில் Ok கிளிக் செய்யுங்கள்.
  3. விண்டோஸ் XP சிடி அல்லது மொழி ஆதரவுக் கோப்புகள் உள்ள நெட்வொர்க் பகிர்விடத்தை கேட்டு மற்றொரு உரையாடல் பெட்டி தோன்றும். விண்டோஸ் XP சிடியை செருகுங்கள் அல்லது தகுந்த நெட்வொர்க் இடத்துக்குச் சென்று OK கிளிக் செய்யுங்கள். அவசியமான கோப்புகளை மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் நிறுவி கணினியை மறுதொடக்கம் செய்யுமாறு கேட்கும்.
  4. கணினியை மறுதொடக்கம் செய்வதற்கு Yes கிளிக் செய்யுங்கள்.
  5. மறுதொடக்கம் செய்தபிறகு, கண்ட்ரோல் பேனலில் உள்ள Regional and Language Options ஐ மீண்டும் திறக்கவும்.
  6. Languages டேபில், Detailsஐ கிளிக் செய்யுங்கள். The Text Services and Input Languages விண்டோ தோன்றும். 

  1. Settings டேபில், Add கிளிக் செய்யுங்கள். Add Input Language விண்டோ தோன்றும்.      

  1. உள்ளீட்டு மொழிக்கு Chinese (Taiwan) தேர்ந்தெடுத்து கீபோர்டு லேஅவுட்/IMEக்கு Microsoft New Phonetic IME 2002a தேர்ந்தெடுங்கள்.
  2. OK கிளிக் செய்யுங்கள். இப்போது இதைப் போலவே கூடுதல் மொழிகள் மற்றும் IMEகளை சேர்க்கலாம்.
  3. மீண்டும் Add கிளிக் செய்யுங்கள், உள்ளீட்டு மொழிக்கு Chinese (PRC) மற்றும் கீபோர்டு லேஅவுட்/IMEக்கு Chinese (Simplified) - Microsoft Pinyin IME 3.0 தேர்ந்தெடுங்கள், பிறகு OK கிளிக் செய்யுங்கள்.
  4. மீண்டும் Add கிளிக் செய்யுங்கள்,  உள்ளீட்டு மொழிக்கு Japanese மற்றும் கீபோர்டு லேஅவுட்/IMEக்கு Microsoft IME Standard 2002 ver. 8.1 தேர்ந்தெடுங்கள், பிறகு OK கிளிக் செய்யுங்கள்.
  5. மீண்டும் Add கிளிக் செய்யுங்கள், உள்ளீட்டு மொழிக்கு Korean மற்றும் கீபோர்டு லேஅவுட்/IMEக்கு Korean Input System (IME 2002) தேர்ந்தெடுங்கள்,பிறகு OK கிளிக் செய்யுங்கள். the Text Services and Input Languages விண்டோவில், Installed services பட்டியல் பெட்டியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட நான்கு IMEகள் காண்பிக்கப்படும். 

  1. Text Services and Input Languages விண்டோவை மூடுவதற்கு OK கிளிக் செய்யுங்கள்.
  2. கண்ட்ரோல் பேனலில் Regional and Language Optionsஐ மூடுவதற்கு OK கிளிக் செய்யுங்கள். விண்டோஸ் டாஸ்க்பாரில் சிவப்பு வட்டமிடப்பட்ட உள்ளீட்டு சுட்டி தெரியும். இந்த சுட்டி உங்கள் கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளீட்டு மொழிகள் நிறுவப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. 

எளிதாக்கப்பட்ட சீன மொழி IME

மைக்ரோசாஃப்ட் நோட்பேடில் சில சீன எழுத்துக்களை உள்ளிடுவதற்கு எளிதாக்கப்பட்ட சீன மொழி IME (Pin Yin) ஐ எப்படி பயன்படுத்துவது என இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  1. நோட்பேடை திறக்கவும் (ஸ்டார்ட் பட்டனில், All Programs சென்று அதில் Accessorie சென்றால் அதில் இருக்கும்). சில எழுத்துக்களை நோட்பேடில் உள்ளிடுங்கள், இந்த எழுத்துகள் IME விண்டோவைக் காட்சிபூர்வமாக பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்

  1. நோட்பேட் செயலில் உள்ள நிலையில், உள்ளீட்டு மொழி சுட்டியை கிளிக் செய்து சீன மொழியை(PRC) தேர்ந்தெடுங்கள். சுட்டி டிஸ்பிளே CH என மாறும், இது சீன மொழி (PRC) புதிய உள்ளீட்டு மொழி என்பதைக் குறிக்கிறது.

  1. நோட்பேடில் கர்சரை வைக்கவும். கர்சர் வரிசையின் ஆரம்பத்தில் இருப்பதற்கு கீபோர்டில் Home பட்டனை அழுத்துங்கள். கீபோர்டில் "N" மற்றும் "I" தட்டச்சிடுங்கள். பின்வரும் படம் டிஸ்பிளேவின் தோற்றத்தைக் காட்டுகிறது. சிறிய கிடைமட்ட செவ்வக விண்டோ ரீடிங் விண்டோவாகும், இது தற்போதைய ஸ்ட்ரிங்கை காட்சிப்படுத்தும். "N" மற்றும் "I" தட்டச்சிட்டதன் விளைவாக தற்போது "ni" ரீடிங் ஸ்ட்ரிங் ஆகும்.

  1. '3' தட்டச்சிடுங்கள். இப்போது நோட்பேடில் பின்வருபவை காட்சிதரும். N+I+3 எளிதாக்கப்பட்ட சீன மொழியில் முழுமையான ஒரு உச்சரிப்பு என்பதால் பயனர் எந்த எழுத்தை உள்ளிட விரும்பினார் என்பதை IME அறிவதற்குப் போதுமான தகவல் உள்ளது. நீங்கள் முழுமையான உச்சரிப்பை உள்ளிட்டுள்ளீர்கள் என்பதால் ரீடிங் விண்டோ மறைகிறது. நோட்பேட் கர்சரின் மீது ஒரு எழுத்து காட்சிப்படுத்தப்படும். இந்த எழுத்து நோட்பேடின் ஒரு பகுதியாக இல்லை, அதற்கு பதில் நோட்பேடுக்கு மேலே மற்றொரு விண்டோவில் நோட்பேடில் உள்ள எழுத்துக்களை மறைத்தபடி தோன்றுகிறது, இந்த புதிய விண்டோ காம்போசிஷன் விண்டோ எனப்படுகிறது. அதிலுள்ளதை காம்போசிஷன் ஸ்ட்ரிங் என்கிறோம் மேலும் இந்த காம்போசிஷன் ஸ்ட்ரிங் டிஸ்பிளேயில் அடிக்கோடிடப்பட்டுள்ளது.

  1. இப்போது வேறொரு எழுத்தை உள்ளிடுவதற்கு "H", "A". "O", "3" தட்டச்சிடுங்கள். "H" தட்டச்சிடும்போது படிக்கும் விண்டோ தெரிவதையும் "3" தட்டச்சிடப்பட்டவுடன் மறைவதையும் கவனியுங்கள். கீழே காட்டப்பட்டுள்ளபடி, இப்போது காம்போசிஷன் ஸ்ட்ரிங் இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

  1. கீபோர்டில் இடது அம்புக்குறியை ஒருமுறை அழுத்துங்கள். காம்போசிஷன் கர்சர் இடதுபுறமாக ஒரு எழுத்துக்கு நகரும். கீழே காட்டப்பட்டுள்ளது போல நோட்பேட் மேல் ஒரு விண்டோ தோன்றும். இந்த விண்டோ கேண்டிடேட் விண்டோ எனப்படுகிறது. இது நீங்கள் தட்டச்சிட்ட உச்சரிப்புக்கு பொருந்தக்கூடிய எழுத்துக்கள் அல்லது வாக்கியங்களின் பட்டியலை காட்சிப்படுத்தும். கேண்டிடேட் பட்டியலில் உள்ளவற்றில் உங்களுக்குத் தேவையான வார்த்தையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த உதாரணத்தில் ஒரே உச்சரிப்புடன் இரண்டு கேண்டிடேட் எழுத்துக்கள் உள்ளன.

இரண்டாவது உள்ளீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு 2அழுத்துங்கள். கேண்டிடேட் விண்டோ இப்போது மூடிவிடும், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்து காம்போசிஷன் விண்டோவில் தெரியும்
  1. Enter அழுத்துங்கள். இது காம்போசிஷன் முடிந்துவிட்டது, ஸ்ட்ரிங்கை செயலிக்கு (இந்த உதாரணத்தில் நோட்பேடுக்கு) அனுப்பலாம் என IMEக்கு தெரியப்படுத்தும். காம்போசிஷன் விண்டோ மூடுகிறது, WM_CHAR மூலமாக  இரண்டு எழுத்துக்களும் நோட்பேடுக்கு அனுப்பப்படுகிறது. பின்வரும் படத்தில் அடிக்கோடைக் காணவில்லை ஏனெனில் காட்டப்படும் இரண்டு எழுத்துக்களும் நோட்பேடில் உள்ளவை. ஏற்கனவே உள்ள "ABCDEFG" வலது பக்கமாக நகர்கிறது, ஏனெனில் இன்னும் இரண்டு எழுத்துக்கள் உள்ளிடப்பட்டுள்ளன. நீங்கள் இப்போது வெற்றிகரமாக IME பயன்படுத்தி இரண்டு எளிதாக்கப்பட்ட சீன மொழி எழுத்துக்களை உள்ளிட்டுவிட்டீர்கள்.

பாரம்பரிய சீன மொழி IME

நோட்பேடில் சில சீன எழுத்துக்களை உள்ளிடுவதற்கு பாரம்பரிய சீன மொழி IME (புதிய ஃபோனாட்டிக்) ஐ எப்படி பயன்படுத்துவது என இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  1. நோட்பேடை திறக்கவும். சில எழுத்துக்களை நோட்பேடில் உள்ளிடுங்கள், இந்த எழுத்துகள் IME விண்டோவைக் காட்சிபூர்வமாகப் பார்ப்பதற்கு பிறகு உதவியாக இருக்கும்.

  1. உள்ளீட்டு மொழி சுட்டியை கிளிக் செய்து சீன மொழியை (தைவான்) தேர்ந்தெடுங்கள். சுட்டி டிஸ்பிளே CH என மாறும், இது சீன மொழி (தைவான்) புதிய உள்ளீட்டு மொழி என்பதைக் குறிக்கிறது.

  1. நோட்பேடில் கர்சரை வைக்கவும். கர்சர் வரிசையின் ஆரம்பத்தில் இருப்பதற்கு கீபோர்டில் Home பட்டனை அழுத்துங்கள். கீபோர்டில் "S" மற்றும் "U" தட்டச்சிடுஙகள். பின்வரும் படம் டிஸ்பிளேவின் தோற்றத்தைக் காட்டுகிறது. சிறிய செங்குத்து செவ்வக விண்டோ ரீடிங் விண்டோவாகும், பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, "S" மற்றும் "U" தட்டச்சிட்டதன் விளைவாக ரீடிங் ஸ்ட்ரீங்கில் இரண்டு எழுத்துக்கள் உள்ளன.

  1. 3 உள்ளிடுங்கள். இப்போது நோட்பேடில் பின்வருவதை காட்சிப்படுத்தும். S+U+3  பாரம்பரிய சீன மொழியில் முழுமையான ஒரு உச்சரிப்பு என்பதால் பயனர் எந்த எழுத்தை உள்ளிட விரும்பினார் என்பதை IME அறிவதற்குப் போதுமான தகவல் உள்ளது. நீங்கள் முழுமையான உச்சரிப்பை உள்ளிட்டதால் ரீடிங் விண்டோ மறைந்துவிடுகிறது. நோட்பேட் கர்சரின் மீது ஒரு எழுத்து காட்சிப்படுத்தப்படும். இந்த எழுத்து நோட்பேடின் ஒரு பகுதியாக இல்லை, அதற்கு பதில் நோட்பேடுக்கு மேலே மற்றொரு விண்டோவில் நோட்பேடில் உள்ள எழுத்துக்களை மறைத்தபடி தோன்றுகிறது, இந்த புதிய விண்டோ காம்போசிஷன் விண்டோ எனப்படுகிறது. அதிலுள்ளதை காம்போசிஷன் ஸ்ட்ரிங் என்கிறோம் மேலும் இந்த காம்போசிஷன் ஸ்ட்ரிங் டிஸ்பிளேயில் அடிக்கோடிடப்பட்டுள்ளது.

  1. இப்போது வேறொரு எழுத்தை உள்ளிடுவதற்கு "C", "L" மற்றும் "3" உள்ளிடுங்கள். "C" உள்ளிடும்போது படிக்கும் விண்டோ தெரிவதையும் "3" உள்ளிடப்பட்டவுடன் மறைவதையும் கவனியுங்கள். கீழே காட்டப்பட்டுள்ளபடி, இப்போது காம்போசிஷன் ஸ்ட்ரிங் இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
Composition string
  1. கீபோர்டில் கீழ் அம்புக்குறியை ஒருமுறை அழுத்துங்கள். காம்போசிஷன் கர்சர் கீழ்ப்புறமாக ஒரு எழுத்துக்கு நகரும். கீழே காட்டப்பட்டுள்ளது போல நோட்பேட் மீது ஒரு விண்டோ தோன்றும். இந்த விண்டோ கேண்டிடேட் விண்டோ எனப்படுகிறது. இது நீங்கள் தட்டச்சிட்ட உச்சரிப்புக்கு பொருந்தக்கூடிய எழுத்துக்கள் அல்லது வாக்கியங்களின் பட்டியலைக் காட்சிப்படுத்தும். கேண்டிடேட் பட்டியலில் உள்ளவற்றில் உங்களுக்குத் தேவையான வார்த்தையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த உதாரணத்தில் ஒரே உச்சரிப்புடன் மூன்று கேண்டிடேட் எழுத்துக்கள் உள்ளன.

  1. இரண்டாவது உள்ளீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு "2" அழுத்துங்கள். இப்போது கேண்டிடேட் விண்டோ மூடுகிறது, காம்போசிஷன் ஸ்ட்ரிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்து சேர்கிறது.

  1. Enter அழுத்துங்கள். இது காம்போசிஷன் முடிந்துவிட்டது, ஸ்ட்ரிங்கை செயலிக்கு-(இந்த உதாரணத்தில் நோட்பேடுக்கு) அனுப்பலாம் என IMEக்கு தெரியப்படுத்தும். காம்போசிஷன் விண்டோ மூடுகிறது, WM_CHAR மூலமாக  இரண்டு எழுத்துக்களும் நோட்பேடுக்கு அனுப்பப்படுகிறது. பின்வரும் படத்தில் அடிக்கோடைக் காணவில்லை ஏனெனில் காட்டப்படும் இரண்டு எழுத்துக்களும் நோட்பேடில் உள்ளவை. ஏற்கனவே உள்ள "ABCDEFG" வலது பக்கமாக நகர்கிறது, ஏனெனில் இன்னும் இரண்டு எழுத்துக்கள் உள்ளிடப்பட்டுள்ளன. நீங்கள் இப்போது வெற்றிகரமாக IME பயன்படுத்தி இரண்டு பாரம்பரிய சீன மொழி எழுத்துக்களை உள்ளிட்டுவிட்டீர்கள்.

ஜப்பானிய மொழி IME

நோட்பேடில் சில ஜப்பானிய எழுத்துக்களை உள்ளிடுவதற்கு ஜப்பானியை மொழி IMEஐ எப்படி பயன்படுத்துவது என இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  1. நோட்பேடை திறக்கவும். சில எழுத்துக்களை நோட்பேடில் உள்ளிடுங்கள், இந்த எழுத்துகள் IME விண்டோவைக் காட்சிபூர்வமாகப் பார்ப்பதற்கு பிறகு உதவியாக இருக்கும்.

  1. நோட்பேட் செயலில் உள்ள நிலையில், உள்ளீட்டு மொழி சுட்டியை கிளிக் செய்து ஜப்பானிய மொழியைத் தேர்ந்தெடுங்கள். சுட்டி டிஸ்பிளே JP என மாறும், இது ஜப்பானிய மொழி புதிய உள்ளீட்டு மொழி என்பதைக் குறிக்கிறது.

  1. நோட்பேடில் கர்சரை வைக்கவும். கர்சர் வரிசையின் ஆரம்பத்தில் இருப்பதற்கு கீபோர்டில் Home பட்டனை அழுத்துங்கள். கீபோர்டில் "N" மற்றும் "I" தட்டச்சிடுஙகள். பின்வரும் படம் டிஸ்பிளேவின் தோற்றத்தைக் காட்டுகிறது. N+I ஜப்பானிய மொழியில் முழுமையான ஒரு உச்சரிப்பு என்பதால் பயனர் எந்த எழுத்தை உள்ளிட விரும்பினார் என்பதை IME அறிவதற்குப் போதுமான தகவல் உள்ளது. நோட்பேட் கர்சரின் மீது ஒரு எழுத்து காட்சிப்படுத்தப்படும். இந்த எழுத்து நோட்பேடின் ஒரு பகுதியாக இல்லை, அதற்கு பதில் நோட்பேடுக்கு மேலே மற்றொரு விண்டோவில் நோட்பேடில் உள்ள எழுத்துக்களை மறைத்தபடி தோன்றுகிறது, இந்த புதிய விண்டோ காம்போசிஷன் விண்டோ எனப்படுகிறது. அதிலுள்ளதை காம்போசிஷன் ஸ்ட்ரிங் என்கிறோம் மேலும் இந்த காம்போசிஷன் ஸ்ட்ரிங் டிஸ்பிளேயில் அடிக்கோடிடப்பட்டுள்ளது.

  1. இப்போது இன்னும் இரண்டு எழுத்துக்களை உள்ளிடுவதற்கு "H", "O". "N", "G"  மற்றும் "O" தட்டச்சிடுங்கள். கீழே காட்டப்பட்டுள்ளது போல இப்போது காம்போசிஷன் ஸ்ட்ரிங் நான்கு எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

  1. ஸ்பேஸ் பாரை அழுத்துங்கள். இது உள்ளிடப்பட்ட எழுத்துக்களை கிளாஸ்களாக மாற்றுவதற்கு IMEஐ அறுவுறுத்தும். கீழேயுள்ள படத்தில், IME "Nihongo" என்ற உச்சரிப்பை காஞ்சியில் உள்ள ஒரு கிளாஸாக மாற்றுகிறது. காஞ்சி என்றால் "ஜப்பானிய மொழி" என்று பொருள்.

  1. கீபோர்டில் கீழ் அம்புக்குறியை ஒருமுறை அழுத்துங்கள். கீழே காட்டப்பட்டுள்ளது போல ஒரு விண்டோ தோன்றும். இந்த விண்டோ கேண்டிடேட் விண்டோ எனப்படுகிறது. இது நீங்கள் உள்ளிட்ட உச்சரிப்புக்குப் பொருந்தக்கூடிய கிளாஸ்ளை காட்சிப்படுத்தும். கேண்டிடேட் பட்டியலில் உள்ளவற்றில் உங்களுக்குத் தேவையான வார்த்தையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த உதாரணத்தில் ஒரே உச்சரிப்புடன் மூன்று கேண்டிடேட் கிளாஸ்கள் உள்ளன. இரண்டாவது உள்ளீடு சிறப்பித்துக்காட்டப்பட்டுள்ளதையும், காம்போசிஷன் ஸ்ட்ரிங் மாறுவதையும் கவனியுங்கள். இது கீழ் அம்புக்குறியை அழுத்துவதால் ஏற்படுகிறது. இது முன்பு காட்சிப்படுத்தப்பட்டதற்கு அடுத்துள்ள உள்ளீடைத் தேர்ந்தெடுக்குமாறு IMEக்கு கூறுகிறது.

  1. இரண்டாவது உள்ளீடைத் தேர்ந்தெடுப்பதற்கு "2" உள்ளிடுங்கள். இப்போது கேண்டிடேட் விண்டோ மூடுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்து காம்போசிஷன் ஸ்ட்ரிங்கில் தெரிகிறது.

  1. Enter அழுத்துங்கள். இது காம்போசிஷன் முடிந்துவிட்டது, ஸ்ட்ரிங்கை செயலிக்கு (இந்த உதாரணத்தில் நோட்பேடுக்கு) அனுப்பலாம் என IMEக்கு தெரியப்படுத்தும். காம்போசிஷன் விண்டோ மூடுகிறது, WM_CHAR மூலமாக  இரண்டு எழுத்துக்களும் நோட்பேடுக்கு அனுப்பப்படுகிறது. பின்வரும் படத்தில் அடிக்கோடைக் காணவில்லை ஏனெனில் காட்டப்படும் இரண்டு எழுத்துக்களும் நோட்பேடில் உள்ளவை. ஏற்கனவே உள்ள "ABCDEFG" வலது பக்கமாக நகர்கிறது, ஏனெனில் இன்னும் இரண்டு எழுத்துக்கள் உள்ளிடப்பட்டுள்ளன. நீங்கள் இப்போது வெற்றிகரமாக IME பயன்படுத்தி சில ஜப்பானிய எழுத்துக்களை உள்ளிட்டுவிட்டீர்கள்.

கொரிய மொழி IME

நோட்பேடில் சில கொரிய எழுத்துக்களை உள்ளிடுவதற்கு கொரிய மொழி IMEஐ எப்படி பயன்படுத்துவது என இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  1. நோட்பேடை திறக்கவும். சில எழுத்துக்களை நோட்பேடில் உள்ளிடுங்கள், இந்த எழுத்துகள் IME விண்டோவைப் பார்ப்பதற்கு பிறகு உதவியாக இருக்கும்.
Characters that help to visualize the IME window better later
  1. நோட்பேட் செயலில் உள்ள நிலையில், உள்ளீட்டு மொழி சுட்டியை கிளிக் செய்து கொரியன் தேர்ந்தெடுங்கள். சுட்டி டிஸ்பிளே KO என மாறும், இது கொரிய மொழி, புதிய உள்ளீட்டு மொழி என்பதைக் குறிக்கிறது.

நோட்பேடில் கர்சரை வைக்கவும். கர்சர் வரிசையின் ஆரம்பத்தில் இருப்பதற்கு கீபோர்டில் Home பட்டனை அழுத்துங்கள். பிறகு “G” தட்டச்சிடுஙகள். பின்வரும் படம் டிஸ்பிளேவின் தோற்றத்தைக் காட்டுகிறது. “G” உடன் தொடர்புடையை ஃபோனாட்டிக் அம்சம் நோட்பேடில் தோன்றுகிறது, இது கறுப்புநிர கர்சரால் சிறப்பித்துக்க காட்டப்படுகிறது. சிறப்பித்துக் காட்டப்பட்ட இந்த எழுத்து காம்போசிஷன் ஸ்ட்ரிங் ஆகும். பிற மொழிகளுக்கான IME போலன்றி பயனர் ஒரு ஃபோனாட்டிக் அம்சத்தை உள்ளிட்டவுடன் காம்போசிஷன் ஸ்ட்ரிங் நோட்பேடில் எற்கனவே உள்ள எழுத்துக்களுக்கு இடதுபுறம் காட்சிப்படுத்தப்படுகிறது
  1. இந்த நேரத்தில் காம்போசிஷன் ஸ்ட்ரிங் இடைக்கால எழுத்தைக் கொண்டுள்ளது, பயனரால் உள்ளிடப்படும் எந்த ஒரு ஃபோனாட்டிக் அம்சமும் காம்போசிஷன் ஸ்ட்ரிங்கில் உள்ளதை மாற்றும். இப்போது "K" மற்றும் "S" உள்ளிடுங்கள். ஒவ்வொரு விசை அழுத்தத்துடனும் இடைக்கால எழுத்து மாறுவதை கவனியுங்கள்.

  1. இப்போது வலதுபுறமுள்ள CTRL விசையை அழுத்துங்கள். கேண்டிடேட் விண்டோ தோன்றுகிறது, இது ஹன்ஜா எழுத்துக்களைப் பட்டியலிடுகிறது. நீங்கள் உள்ளிட்ட G+K+S உச்சரிப்புக்கானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

  1. பட்டியலில் உள்ள முதல் உள்ளீடைத் தேர்ந்தெடுப்பதற்கு 2 அழுத்துங்கள். கேண்டிடேட் விண்டோ மூடுகிறது, காம்போசிஸன் விண்டோவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்து தெரிகிறது.

  1. மற்றொரு எழுத்தை உள்ளிடுவதற்கு "R", "N", மற்றும் "R" உள்ளிட்டு வலதுபுறமுள்ள CTRL விசையை அழுத்துங்கள்.

  1. முதல் உள்ளீடைத் தேர்ந்தெடுப்பதற்கு 1 அழுத்துங்கள். IME பயன்படுத்தி நீங்கள் வெற்றிகரமாக இரண்டு கொரிய எழுத்துக்களை உள்ளிட்டுவிட்டீர்கள். கொரிய எழுத்துக்கள் ஏற்கனவே நோட்பேடில் உள்ள எழுத்து வரிசையின் ஒரு பகுதியாகத்தான் இருக்கின்றன.


தேவைப்பாடுகள்

ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் XP
தேவைப்படும் ஹார்ட் டிஸ்க் காலியிடம் குறைந்தபட்சம் 230 MB
அயல்மொழிக் கோப்பு இருப்பிடங்கள் விண்டோஸ் XP நிறுவல் சிடி அல்லது XP நிறுவல் கோப்புகள் கொண்ட நெட்வொர்க் இருப்பிடம்
நேரம் அயல்மொழிக் கோப்புகளை நிறுவுவதற்கு கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள்; நான்கு வெவ்வேறு IMEகளை மறுஆய்வு செய்வதற்கு ஒவ்வொன்றுக்கும் பத்து நிமிடங்கள்.

​ 


​​​​​​​​​

மேலும்...

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint
©2017 Microsoft Corporation. All rights reserved.