Trace Id is missing
Sri Ranganathaswamy Temple in Srirangam, Tamil Nadu

அனைத்து மொழிகள் மற்றும் செயலிகளுக்குமான உற்பத்தித் திறன்

நாடு உண்மையிலேயே டிஜிட்டல் மயமாவதற்கு, மக்கள் பேசுகிற அல்லது எழுதுகிற மொழி எதுவாக இருந்தாலும், அதன் மூலம் அனைவரும் தொழில்நுட்பத்தை அணுகுவது எளிதானதாகவும் திறன்மிக்கதாகவும் இருக்கவேண்டும். நாட்டில் அதிகாரபூர்வ மொழிகள் 22 இருப்பதையும், அவற்றில் 6 உலகளவிலான முதல் 20 மொழிகளில் இருப்பதையும் மனதில் கொண்டு, மைக்ரோசாஃப்ட் இந்திய பிராந்திய மொழிகளில் அணுக எளிதானத் தயாரிப்புகளையும் செயலிகளையும் உருவாக்க உழைத்து வருகிறது.

2000 ஆவது ஆண்டிலிருந்து இந்திய மொழிகளுக்கு யுனிகோட் ஆதரவை வழங்குவதில் மைக்ரோசாஃப்ட் முன்னோடியாக இருக்கிறது. மொழித் தடைகளை உடைக்க, நாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மொழிகளுக்காகப் பணியாற்றத் தொடங்கினோம். இந்திய மொழிகளைக் கணினிகளில் பயன்படுத்துவதற்கு, 1998-ல் பாஷா என்ற திட்டத்தைத் தொடங்கினோம். அப்போதிருந்து நீண்ட தூரம் பயணித்துவிட்டோம். எங்களுடைய அனைத்து தயாரிப்புகளிலும் இந்தியாவில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 22 மொழிகளிலும் உள்ளீடுகளை செய்ய வழிசெய்திருக்கிறோம் மேலும் விண்டோஸ் இண்டர்ஃபேஸ் 12 மொழிகளில் கிடைக்கிறது. Bhashaindia.com என்ற எங்களுடைய சமூகப் போர்டல் இந்திய மொழி உள்ளடக்கங்கள் மற்றும் கருவிகளைக் கொண்டுள்ள முக்கியமான தொகுப்பு ஆகும்.

இந்தியாவில் உள்ளூர் மொழியில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்கு டிஜிட்டல் மயமாதல் ஒரு பெரிய வாய்ப்பு என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தியப் பிராந்திய மொழிகளில் அதிகமான செயலிகள் உருவாக்கப்படுவதால், கல்வி, சுகாதரம், வங்கி, தகவல்தொடர்பு, ஈகாமர்ஸ், பொழுதுபோக்கு, விவசாயம், ஈ-கவர்னன்ஸ், போக்குவரத்து இன்னும் பல துறைகளில் உள்ள வளங்களுக்கான அணுகலை லசக்கணக்கான பயனர்கள் பெறுகிறார்கள். மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகள் இந்திய மொழிகளில் எப்படி செயல்படுகிறது எனப் பார்ப்போம்:

விண்டோஸ் 10

இந்திய மொழிகளில் செயல்படுதல் என வரும்போது, புதிய விண்டோஸ் அதிக ஆற்றலும், அம்சங்களும் நிறைந்ததாக உள்ள OS ஆகும். உரைகளை எளிதாக உள்ளிடுவது மட்டுமல்லாமல், உங்களுக்கு விருப்பமான மொழியில் விண்டோஸ் பயனர் இண்டர்ஃபேஸை மாற்றிக் கொள்ளலாம். யுனிகோடை ஆதரிக்கும் பலவகை எழுத்துருக்களையும் நீங்கள் பயன்படுத்தலாம், இதனால் கிட்டத்தட்ட யுனிகோடை ஆதரிக்கும் எந்த ஒரு பயன்பாட்டையும் நீங்கள் பயன்படுத்த முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் மேப்ஸ் போன்று, இந்திய மொழிகளில் செயல்படக்கூடிய பல விண்டோஸ் செயலிகள் உள்ளன. சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்திய மொழிப் பயனாளருக்கு அவர் நன்கு அறிமுகமான அதேபோன்ற சௌகர்யமான அனுபவத்தை விண்டோஸ் 10 அளிக்கிறது.

ஆஃபிஸ் 365 

பல நாடுகளைச் சேர்ந்த மற்றும் பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் வேலை செய்கிற பயனர்கள் தங்களுடைய தாய் மொழியில் எளிதாக உள்ளடக்கங்களை உருவாக்கிப் பயன்படுத்த ஆஃபிஸ் சூட் உதவுகிறது. ஆஃபிஸ் செயலிகள் அனைத்து இந்திய மொழிகளிலும் செயல்படுகிறது மேலும் விண்டோஸ் 7 மற்றும் அதற்குப் பிந்தைய வெளியீடுகளில் இயங்கும். நுகர்வோருக்கும், வர்த்தகரீதியாகவும் தங்குதடையற்ற தகவல் தொடர்பில் உதவுவதற்கு விண்டோஸ், ஆன்ட்ராய்டு மற்றும் iOS என அனைத்திலும் ஆஃபிஸ் செயலிகள் கிடைக்கின்றன. 

மைக்ரோசாஃப்ட் லேங்குவேஜ் அசெசரி பேக்ஸ் 

இலவசமாகப் பதவிறக்கக்கூடிய மைக்ரோசாஃப்ட் லேங்குவேஜ் அசெசரி பேக்ஸ் பயன்படுத்தி விண்டோஸ் மற்றும் ஆஃபிஸில் இந்திய மொழிப் பயன்பாடுகளை மைக்ரோசாஃப்ட் அளிக்கிறது. விண்டோஸில் 3,00,000 வார்த்தைகளுக்கான மொழிபெயர்ப்புகளும் ஆஃபிஸில் 6,00,000 வார்த்தைகளுக்கான மொழிபெயர்ப்புகளும் லேங்குவேஜ் அசெசரி பேக்கில் உள்ளது. லேங்குவேஜ் அசெசரி பேக் விருப்பமான மொழியில் பயனர் இண்டர்ஃபேஸை மாற்றுகிறது மேலும் வழிகாட்டுதல்கள் மற்றும் உரையாடல் பெட்டிகளை உள்ளூர் மொழியில் வழங்குகிறது.

உள்ளீட்டு முறை திருத்திகள்

விண்டோஸ் வழக்கமான இந்திய மொழி கீபோர்டுகளை உள்ளடக்கியுள்ளது, அதேநேரம் சில பயனர்கள் டிரான்ஸ்லிட்டரேஷன் போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி உரை உள்ளீடுகளைச் செய்ய விரும்புகிறார்கள். அது போன்ற பயனர்களுக்கு பலவித உள்ளீடு முறை திருத்திகளை மைக்ரோசாஃப்ட் Bashaindia.com ல் வழங்குகிறது. 

பிங்

ஒன்பது இந்திய மொழிகளை ஆதரிக்கும் தேடல் கருவி. இந்திய மொழி அனுபவம் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் கருவிகளிலும் கிடைக்கிறது. பிங் டிரான்ஸ்லேட்டர் பல இந்திய மொழிகளில் வேலை செய்கிறது.

ஸ்கைப் லைட்

அன்ட்ராய்டுக்கான் நம்முடைய ஸ்கைப் செயலியின், சிக்கலில்லாத, துரிதமாகச் செயல்படுகிற பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது, சவலான நெட்வொர்க் சூழல்களில் மிகச்சிறப்பாக செயல்படும் வகையில் இந்தியர்கள் தொடர்ந்து இணைப்பிலிருக்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த செயலி 11 இந்திய மொழிகளில் கிடைக்கிறது: ஆங்கிலத்துடன் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது. 

கைஸலா செயலி

மிகப்பெரிய குழுத் தகவல்தொடர்பு மற்றும் பணி நிர்வாகத்துக்காக, தொலைதூரப் பகுதிகிளில் 2G நெட்வொர்க்குகள் மூலம் அணுகவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலிதான் கைஸலா. இந்தச் செயலி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, ஆன்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு ஹிந்தி, பெங்காலி மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. 

ஸ்விஃப்ட்கீ

AI இன் ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்துகிற கீபோர்டு, ஆன்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கானது. இதில், 24 இந்திய மொழிகளில் உரை உள்ளீடு செய்யமுடியும் மேலும் மார்வாரி, போடோ, சண்டாலி மற்றும் காஸி போன்ற பேச்சுவழக்கு மொழிகளிலும் கிடைக்கிறது. AI ஐ கீபேட்களில் பயன்படுத்துவதால், உள்ளீடுகளை விரைவாகவும் ஊகித்தும் செய்யமுடிகிறது. இது பல மொழிகளில் கலவையாக உள்ளீடுகளைச் செய்யவும் அனுமதிக்கிறது. 

மொழி பெயர்ப்பு

இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதற்கு, ஆர்டிஃபீஷியல் இண்டெலிஜென்ஸ் (AI) மற்றும் டீப் நியூரல் நெட்வொர்க்குகள் (DNN) ஆகியவற்றை நிறுவனம் பயன்படுத்துகிறது. மைக்ரோசாஃப் உலாவிகள், பிங் தேடல், மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் 365 தயாரிப்புகளைப் பயன்படுத்தி எந்த ஒரு வலைத்தளைத்தில் உலாவும்போது, இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகளைப் பெறுவதில் பயனர்களுக்கு உதுவுகிறது. AI மற்றும் DNN ஆகியவை, விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Sway

ஸ்வே என்பது, புதிய யோசனைகள், கதைகள், அறிக்கைகள் மற்றும் பிரசண்டேஷன்களை மல்டிமீடிய உள்ளடக்கங்களின் உதவியுடன் உள்ளூர் மொழிகளில் வழங்குவதற்கான செயலி. இந்த செயலி, பயனர்கள் தேடும் படங்கள், வீடியோக்கள், ட்வீட்கள் மற்றும் பிற உள்ளடக்கங்கள் தொடர்பாக, உள்ளூர் மொழிகளில் தேடப்பட்டவைகளைப் பரிந்துரைச் செய்யும். வடிவமைப்பை மற்றும் லேஅவுட் பற்றிய கவலை இன்றி இவற்றை பயன்படுத்தலாம்.

ஒன்நோட்

செய்ய வேண்டியவை பட்டியல்கள், சந்திப்புக் குறிப்புகள், விடுமுறைக்காலத் திட்டங்கள் அல்லது ஒரு நபர் சீராக அல்லது நினைவில் வைத்துக்கொள்வதற்கு விரும்பும் எந்த ஒரு விஷயத்தையும் நிர்வகிக்கும் டிஜிட்டல் நோட்புக்தான் ஒன்நோட் ஆகும். பயனர்கள் உள்ளூர் மொழியில் உள்ளிடலாம், எழுதுலாம், பதிவுசெய்யலாம் மற்றும் பகிரலாம். PC, Mac, விண்டோஸ் ஃபோன், iPhone, iPad, ஆப்பிள் வாட்ச், ஆன்ட்ராய்டு, மற்றும் ஆன்ட்ராய்டு அணியும் சாதனங்கள் ஆகியவற்றில் ஒன்நோட் இலவசமாகக் கிடைக்கிறது.

இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகள்

ஆன்ட்ராய்டு மற்றும் iOS இல் உள்ள அவுட்லுக் செயலி உள்ளிட்ட மின்னஞ்சல் செயலிகள் மற்றும் சேவைகளில், 15 இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதை மைக்ரோசாஃப்ட் ஆதரிக்கிறது. இந்த ஆதரவு எதிர்காலத் தேவைக்கு ஏற்பத் தயாராக உள்ளது. பிற இந்திய மொழிகளில் டொமைன் பெயர்கள் கிடைக்கும்போது, அந்த மொழிகளிளும் நாங்கள் மின்னஞ்சல் முகவரிகளை வழங்குவோம்.

இந்தியா போன்ற ஒரு நாட்டில், சமூகத்தின் பல தரப்பினருக்கும் கணினி அணுகலை அளிப்பதற்கு மொழியாக்கம் வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இதன் மூலம் தற்போதிருக்கும் மொழிப் பிரிவினை நீக்கப்படும்.