About BhashaIndia | Contribute | SiteMap | Register | Sign in to Windows Live ID
  Patrons Developers
Hindi Tamil Kannada Gujarati Marathi Telugu Bengali Malayalam Punjabi Konkani Oriya Sanskrit Nepali
Home > Patrons > CaseStudies > அரசுத் துறைக்கான தகவல் தொழில்நுட்பங்கள் Welcome Guest!

அரசுத் துறைக்கான தகவல் தொழில்நுட்பங்கள்:

ஹரியானா அரசின் அனுபவங்கள்.

ஹரியானா மாநில கருவூலத்துறையும் நாட்டின் இதர அரசுத் துறைகளைப் போல பிரச்சனைகளைச் சந்தித்து வந்தது. மாநிலம் முழுவதும் 21 மாவட்டக் கரூவூலங்கள், 80 துணை மாவட்டக் கருவூலங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகம் மற்றும் கணக்குகள் பழைய முறையிலேயே பின்பற்றப்பட்டு வந்தன. இதனால் கால தாமதங்களும், பணியில் தரக்குறைவும் ஏற்பட்டது. எனவே, அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைஷாஆக்கபூர்வமாகப் பயன்படுத்த அரசு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் 'தேசிய தகவல் மையம்' (National Informatics Center) வடிவமைத்துக் கொடுத்த ஆ'ன் -லைன் கரூவூலத் தகவல் அமைப்பு' (Online Treasury Information System) மூலம் அனைத்துக் கருவூல அலுவலகங்களும் மாநிலத்தில் இணைக்கப் பட்டன.

இதனைச் சாத்தியமாக்கியது 'விண்டோ ஸ் 2000 சர்வ'ரும், 'எஸ்.க்யு.எல் சர்வர் 2000'-ம் கும். எவ்வாறு என்றால் 'உடன் நிகழ் தகவல்'களை (Real Time Information) உடனுக்குடனே பெறும் வகையில் இவை எளிமைப்படுத்தப் பட்டிருந்தன. பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் 100% தருகிறது.

சூழ்நிலை:

வெளிப்படைத் தன்மையற்ற பழைய முறைகள்.

ஹரியானா மாநில அரசு நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டது. குறிப்பாக சமூக நலம் மற்றும் பொதுத்துறைகள் நவீன மயமாக்கப்படவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தது. இருந்தபோதும், நிதிப் பரிவர்த்தனையில் தான் அரசு கடும் நிர்வாகப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்தது. பணம் பட்டுவாடா செய்யப்படுவதை பழைய முறையில் (Manual) பதிவு செய்து வந்ததால், தகவல்களை துல்லியமாகவும், காலந் தவறாமலும் பெற முடியவில்லை. இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரியகாலத்தில் அமலாகாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தவறான தகவல்களின் தீவுக் கூட்டங்கள்

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு முறையில் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டு வந்தன. சில அரசுத் துறைகளில் கையாலேயே எழுதி வந்தனர்; வேறு சில துறைகளில் கணினியில் பதிவு செய்யும் முறை இருந்தது. இதனால், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வசதியில்லாமல், தகவல்கள் தனித் தனி தீவுக் கூட்டங்கள் போலாயின.

உடன் நிகழ் தகவல்கள் (Real Time Information) பற்றாக்குறை

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுக் கருவூல நிதி ஒரு முன்னணி வங்கி மூலமாகத்தான் விநியோகிக்கப் படுகிறது. பிற வங்கிகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளையும் ஒருங்கிணைத்து, அரசிற்கு அறிக்கை அளிக்கவேண்டிய பொறுப்பு இந்த முன்னணி வங்கிக்குத்தான் உள்ளது. பல வங்கிகள் இன்னமும் கணினிமயமாக்கப்படாததால், உடனடித் தகவல்களைப் பெறுவது நீண்ட கால மெடுப்பதாகவும், சலிப்பூட்டுவதாகவும், குழப்பமேற்படுத்துவதாகவும் அமைகிறது. இரு முனைகளுக்கு இடையே பெறும் தேக்கநிலை நிலவியது. வங்கிகளின் உள் நடவடிக்கைகளைச் சார்ந்தே கருவூலங்கள் செயல்பட வேண்டிய நிலை இருந்தது. இதனால், நிர்வாகத் திறமையின்மையை அரசு சந்தித்தது.

எனவே, இதற்கு ஒரு தீர்வுகாண ஹரியானா அரசு விரும்பியது. 21 மாவட்டக் கரூவூலங்கள், 80 மாவட்டத் துணைக் கரூவூலங்கள், கருவூலத் துறை இயக்குநர் அலுவலகம், மாநிலத் தலைமைக் கணக்காளர் அலுவலகம் நிதித்துறை கியவற்றை தகவல் தொழில்நுட்பம் மூலம் இணைக்க விரும்பியது. இதனைச் செயல்படுத்த பல தேசிய வங்கிக் கிளைகளை கரூவூலத்துறையுடன் இணப்பது அவசியமாக இருந்தது.

ஹரியானா அரசின் இத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 'ஆன்லைன் கருவூலத் தகவல் அமைப்பு' உருவாகியது. இதனைச் செயல்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோ ஸ் 2000 சர்வர், எஸ்.க்யு.எல் சர்வர் 2000 கியவற்றைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சர்வர்கள் மாவட்டக் கருவூலங்களில் நிறுவப்பட்டன. கிளையன்ட் மெ ஷின்கள் துணைக் கருவூல அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. வங்கிகளைப் பொறுத்தவரை கிளையண்ட்/சர்வர்களோ, கிளையண்ட் மெ ஷின்களோ வேலைத் தன்மைகளைப் பொறுத்து நிருவப் பட்டன. ஒவ்வொரு முனையிலும் டயல்-அப் இணைய இணைப்பு உறுதி செய்யப்பட்டது.

பயன்கள்

ஒவ்வொரு நாளும் நடைபெற்ற பணப் பட்டுவாடாக்கள் தினசரி மின் அஞ்சல் மூலம் மாநிலத் தலைமை அலுவகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதனால், மாநில அரசு தகவல்களை துல்லியமாகவும், உடனுக்குடனும் பெறுகிறது. விநியோகிக்கப்பட்ட பணம், கையிருப்பு ஆகியவை உடனுக்குடன் தெரிவதால், இன்னும் சிறப்பாகத் திட்டமிட முடிகிறது. நிதி ஒதுக்கீடு, சரிபார்த்தல் கியவை இருமுனைகளிலும் சரிபார்க்கப்படுகிறது. இத்தகவல்கள் உடனுக்குடன் திருத்தப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் நிதி இருப்பு எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்.

இதன்பிறகு திறமையான, வெளிப்படையான (Transparency) ஆட்சி நிர்வாகம் தருவதாக மாநில அரசு அளித்த வாக்குறுதி நிறைவேறியது. செக் கிளியரன்ஸ், விரைவான பணப்பட்டுவாடா ஆகியவை ஆன் லைன் மூலம் உடனுக்குடன் நிறைவேறுவதால் மக்களின் நேரம் விரயமாவதில்ல. இதைவிட நிர்வாக முறைகேட்டிற்கும், ஊழலுக்கும் காரணமாக அமையும் 'சிகப்பு நாடா' முறை அகற்றப்படுகிறது.

விளக்கம்

ஹரியானா மாநில அரசு தனது தகவல் தொழில்நுட்பக் கொள்கையை 2000-ல் அறிவித்தது. ஹரியானாவை தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் புதிய கொள்கை அறிவிக்கப் பட்டது.

தேசியத் தலைநகரைச் சுற்றி ஏற்கனவே 21 தொழில்பேட்டைகள் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றில் பல தகவல் தொழில்நுட்பத்துறைக்கு என்றே ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு நகரம், வன்பொருள் தொழில்நுட்பப் பூங்கா போன்றவை ஆகும். தொழில்முறை தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள், குறைவான ஊதியத்தில் மனித உழைப்பு, தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்க மாநில அரசு ஏற்கனவே உறுதி பூண்டிருந்தது.

சூழ்நிலை

'தேசியத் தகவல் மையம்' உருவாக்கித் தந்த 'ஆன் லைன் கருவூலத் தகவல்' அமைப்பை அமல்படுத்த வேண்டிய தேவை மாநில அரசிற்கு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் நிதிப் பட்டுவாடா முறையைச் சிறப்பாக அமல்படுத்த ஒரு பாதுகாப்பான, செயல்திறன்மிக்க பயன்பாட்டுக் கருவி அவசியம். எனவே, விண்டோ ஸ் 2000 சர்வர், எஸ்.க்யு.எல் சர்வர் 2000 ஆகியவற்றை பொருத்தியதன் மூலம் அரசு விரும்பிய சேவைகள் தடையின்றி செயல்படத் தொடங்கியது.

பயன்படுத்தப்பட்ட மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பங்கள்

Windows 2000 server
SQL server 2000
Windows 2000 Professional

பயன்கள்

>நிதி பட்டுவாடா சீராக நடைபெற்றது.
>ஒருங்கிணைந்த நிதிச் சீர்மைப் பயன்பாடு நிறுவப் பட்டது.
>வெளிப்படையான அரசு உருவானது.
>சிறப்பான சேவையை பயனாளர் அடைந்தனர்.

"மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பங்களான விண்டோ ஸ் 2000 சர்வர், எஸ்.க்யு.எல் சர்வர் 2000 ஆகியவற்றை நிறுவ அரசு முடிவு எடுத்ததற்கு முக்கிய காரணங்கள் அவை பயன்படுத்த எளிமையாக இருந்ததுடன், விரைவாகச் செயல்பட்டதுதான். இதற்கெல்லாம் மேலாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்பம், பயிற்சி கியவற்றில் அவர்கள் காட்டிய அக்கறை மிக மிக முக்கியமானது"

திரு.தரம்வீர்
முதன்மைச் செயலர்
தகவல் தொழில் நுட்பத்துறை
ஹரியானா மாநில அரசு.

Partner Profile | Privacy Statement | Why Passport | Testimonials
This site uses Unicode for non-English characters and uses Open Type fonts.
©2003-2007 Microsoft Corporation. All rights reserved.